
தமிழக முதல்வர் ஸ்டாலின் எம்ஜிஆரின் மிகப்பெரிய ரசிகர் என்று சட்டசபையில் அமைச்சர் எ.வ.வேலு கூறியுள்ளார். இது பற்றி அவர் கூறியதாவது, எம்ஜிஆரின் முதல் ரசிகர் முதல்வர் ஸ்டாலின் தான். அவர் காரில் செல்லும்போதெல்லாம் எம்ஜிஆர் பாடலை தான் கேட்பார். தன்னுடைய படம் வெளியானதும் எப்படி இருக்கிறது என்று எம்ஜிஆர் முதலில் ஸ்டாலினிடம் தான் கேட்பார்.
ரஷ்யாவின் மொழியையும் பண்பாட்டையும் காப்பதற்காக போராடிய ஜோசப் ஸ்டாலினை இரும்பு மனிதர் என்று அந்த நாட்டின் மக்கள் அழைத்தனர். மேலும் அதேபோன்று நம்முடைய தாய் மொழியை காப்பதற்காக குரல் போது தமிழக மக்களின் இரும்பு மனிதராக திகழ்கிறார் என்று கூறினார்.
மேலும் மத்திய அரசு தேசிய கல்விக் கொள்கையை ஏற்க வேண்டும் என்று வலியுறுத்தி வரும் நிலையில் இரு மொழிக் கொள்கைதான் ஏற்போம் என்றும் இந்தி திணிப்பை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்றும் முதல்வர் ஸ்டாலின் கூறி வருகிறார். இதனை வைத்து தான் அமைச்சர் வேலு மொழியை காக்க போராடும் இரும்பு மனிதன் என்று ஸ்டாலினுக்கு புகழாரம் சூட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.