
திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பங்கேற்று பேசினார். அவர் கூறியதாவது, வேட்பாளர் யார் என்பதை தலைமை கழகம் முடிவு செய்யும். வெற்றி பெற்றவரே வேட்பாளராக நிறுத்தப்படுவார். திறமை வாய்ந்தவர் நிறுத்தப்படுவார். அவரை மக்கள் தேர்ந்தெடுக்கும்படி உழைக்க வேண்டியது உங்கள் கடமை.
பாஜக கூட்டணியை ஏற்று கொள்ளாவிடில் சொந்த கட்சியில் தலைமைக்கே சிக்கல் வரும் என்று எடப்பாடி பழனிச்சாமி பயப்படுகிறார். அதனால் கூட்டணியை ஏற்றுக்கொண்டு விட்டார். அவருக்கு வேறு வழி இல்லை. பாஜக தமிழ்நாட்டில் எப்படியாவது காலூன்ற நினைக்கிறது. அனைத்து அச்சுறுத்தலையும் செய்து அதிமுகவை அடக்கி விட்டது என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பேசினார்.
இந்த நிலையில் திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் சென்னையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி கூறியதாவது, அதிமுகவே பாஜக மிரட்டி பணிய வைத்து இருக்கிறது என்று முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கூறுகிறார். எங்களுக்கு எந்த மிரட்டலும் இல்லை. மிகுந்த மகிழ்ச்சியோடு உருவானது தான் இந்த கூட்டணி என கூறியுள்ளார்.