சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோ காண்போரை உறைய வைக்கிறது. தாகம் தணிப்பதற்காக நீர்நிலைக்கு வந்த ஒரு மான், எதிர்பாராத விதமாக தண்ணீருக்குள் பதுங்கியிருந்த முதலையிடம் சிக்கிக்கொள்கிறது. முதலையின் பிடியில் இருந்து தப்பிக்க மான் போராடிக்கொண்டிருந்த அந்த இக்கட்டான தருணத்தில், அங்கிருந்தவர்களின் புத்தி உறைந்து போகும் வகையில் திடீரென ஒரு சிங்கம் மின்னல் வேகத்தில் அந்த இடத்திற்கு ஆஜராகிறது.
மேலும் அடுத்த நொடி என்ன நடக்கும் என்ற பரபரப்பில் கேமராமேன் மற்றும் பார்ப்பவர்கள் உறைந்து போனார்கள். யாரும் எதிர்பார்க்காத திருப்பமாக, சிங்கம் அந்த முதலையைத் தாக்கி விட்டு, அதன் பிடியில் இருந்த மானை மிக லாவகமாகத் தூக்கிச் சென்றது.
View this post on Instagram
“>
இதனால் “பசித்தவனுக்குத் தான் வேட்டை தெரியும்” என்பது போல, முதலை தன் இரையை இழக்க, சிங்கம் அங்கிருந்து வெற்றிகரமாகத் தன் உணவை எடுத்துச் சென்றது. இயற்கையின் உணவுச் சங்கிலியில் யார் வலிமையானவர் என்பதை மீண்டும் ஒருமுறை இந்த வீடியோ நிரூபித்துள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.
