சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோ, இயற்கையின் கொடூரமான மற்றும் வியக்கத்தக்க பக்கத்தை நமக்குக் காட்டுகிறது. ஒரு நதியைக் கடக்க முயன்ற வரிக்குதிரை எதிர்பாராத விதமாக பசியோடு காத்திருந்த முதலைகளின் கூட்டத்திடம் சிக்கிக் கொள்கிறது. கண்ணிமைக்கும் நேரத்தில் பல முதலைகள் அந்த வரிக்குதிரையைச் சூழ்ந்து கொண்டு தாக்கத் தொடங்குகின்றன.

இதனால் மரணத்தின் விளிம்பில் நின்ற அந்த ஜீப்ராவின் நிலைமையைப் பார்த்தால், அது உயிர் பிழைக்க வாய்ப்பே இல்லை என்றுதான் எவருக்கும் தோன்றும். அந்தத் தருணம் பார்ப்பவர்களின் நெஞ்சைப் பதற வைக்கும் வகையில் அமைந்துள்ளது.

“>

இருப்பினும், இந்த வீடியோவின் முடிவு யாராலும் நம்ப முடியாத ஒரு திருப்பத்தைக் கொண்டுள்ளது. முதலைகளின் பிடியில் இருந்து விடுபட அந்த வரிக்குதிரை காட்டிய தைரியமும், அதன் போராட்ட குணமும் மெய்சிலிர்க்க வைக்கிறது.

மேலும் பலத்த காயங்களுடன் போராடி, முதலைகளின் தாடையிலிருந்து நழுவி அந்த வரிக்குதிரை கரை ஏறுவது ஒரு அதிசய நிகழ்வாகவே பார்க்கப்படுகிறது. “வாழ்க்கையில் போராடினால் எதையும் வெல்லலாம்” என்பதற்கு உதாரணமாகத் திகழும் இந்த வீடியோ, தற்போது இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.