சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோ, இயற்கையின் வியக்கத்தக்க கருணையை வெளிப்படுத்துகிறது. ஒரு நதிக்கரையில் ஒரு சிறிய நீர்யானை குட்டியை பல முதலைகள் சூழ்ந்துகொண்டு வேட்டையாட முயன்றன. தப்பிக்க வழியின்றி அந்த குட்டி நீர்யானை தவித்தபோது, அங்கு வந்த ஒரு காட்டு யானை சற்றும் எதிர்பாராத விதமாக உதவிக்கு வந்தது.

மேலும் தனது பிரம்மாண்டமான உருவத்தாலும் வலிமையாலும் அந்த முதலைகளை விரட்டியடித்த யானை, குட்டி நீர்யானையின் உயிரைக் காத்தது. பொதுவாக வெவ்வேறு இன விலங்குகளுக்கு இடையே இத்தகைய புரிதல் ஏற்படுவது அரிது என்றாலும், இந்த யானையின் செயல் மனிதநேயத்திற்கு அப்பாற்பட்ட ஒரு பேருயிரின் கருணையை பறைசாற்றுகிறது.

“>

இந்தக் காட்சிகள் இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்று இயற்கையில் ‘வலிமையானது பிழைக்கும்’ என்ற விதி இருந்தாலும், ஆபத்தில் இருக்கும் ஒரு உயிரைக் காக்க மற்றொரு உயிர் முன்வருவது பார்ப்பவர்களை நெகிழச் செய்கிறது.

இதனால் நீர்யானையை வேட்டையாடத் துடித்த முதலைகளின் பிடியில் இருந்து, அந்தப் பிஞ்சு உயிரைக் காப்பாற்றிய யானையின் விரத்தைப் பாராட்டி நெட்டிசன்கள் பலரும் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். காடுகளில் விலங்குகளுக்கு இடையே நடக்கும் இத்தகைய அபூர்வமான மற்றும் உணர்ச்சிகரமான தருணங்கள், இயற்கை எவ்வளவு மர்மமானதும் அதே சமயம் அன்பானதுமானது என்பதையும் நமக்கு உணர்த்துகின்றன.