இன்றைய காலகட்டத்தில் மக்கள் பலரும் வங்கி கணக்குகளை விட அதிக அளவு தபால் நிலைய சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்து வருகின்றனர். சாமானிய மக்களை கருதி இந்திய அஞ்சல் துறை பல சிறு சேமிப்பு திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. இந்த திட்டங்களில் மக்கள் பலரும் நாளுக்கு நாள் அதிக அளவு இணைந்து வருகின்றனர். அஞ்சலகத்தில் பிரபல சேமிப்பு திட்டத்தில் ஒன்றுதான் பிக்சட் டெபாசிட் திட்டம்.

இதில் பயனாளிகளுக்கு அதிக வட்டி வழங்கப்படுகின்றது. அதிலும் குறிப்பாக மூத்த குடிமக்களுக்கு நல்ல வட்டி கிடைக்கிறது. அதன்படி யூனிட்டி ஸ்மால் பைனான்ஸ் வங்கி அண்மையில் பிக்ஸட் டெபாசிட் திட்டத்தில் மூத்த குடிமக்களுக்கு வட்டி விகிதத்தை 9.5 சதவீதம் உயர்த்தியுள்ளது. எந்த வகையான ரிஸ்க்கும் இல்லாமல் பாதுகாப்பாக இந்த திட்டத்தில் முதலீடு செய்யலாம். இந்த ஃபிக்சட் டெபாசிட் திட்டத்தில் அஞ்சல் நிலையம் மற்றும் வங்கிகள் கிட்டத்தட்ட 9 சதவீதம் வரை வட்டி வழங்குகிறது.