
பீகார் மாநிலம் ஔரங்காபாத் மாவட்டத்தில் ஹஸ்புரா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிராமத்தில் நடந்த ஒரு கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏப்ரல் 20 ஆம் தேதி பாட்னா மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், ஹஸ்புரா பகுதியை சேர்ந்த இளைஞரை திருமணம் செய்துகொண்டார்.
திருமணத்திற்கு பிறகு அவர் தனது மாமியார் வீட்டிற்கு வந்திருந்தார். திருமண இரவுக்காக அறை மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தபோதும், மணமகன் உடல் சோர்வைக் காரணமாக்கி உறவு கொள்ள மறுத்துள்ளார். இதே நிலை மறுநாளும் தொடர்ந்துள்ளது.
மூன்றாவது நாளில், திருமணமான பெண் தனி அறையில் இருந்தபோது, அவரது நடுத்தர மைத்துனர் நிகு குமார் அறைக்குள் நுழைந்து பாலியல் தொந்தரவு செய்துள்ளார். பின்னர் இளைய மைத்துனர் மணீஷ் குமாரும் அங்கு வந்து, இருவரும் சேர்ந்து பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தனர்.
பெண் கண்ணீர் விட்டு எதிர்ப்பு தெரிவித்தபோதும், அவரை அவமதித்து, மிரட்டி விட்டுச் சென்றுள்ளனர். மேலும் “உன் கணவர் ஆண்மையற்றவர்” என கூறி மேலும் அவமானப்படுத்தியுள்ளனர்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண், உடனடியாக புகார் அளிக்கவில்லை. இன்று, தன் பெற்றோரிடம் உண்மையை கூறிய பிறகு, ஹஸ்புரா காவல் நிலையத்தில் எழுத்துப் புகார் அளித்தார்.
பாதிக்கப்பட்ட பெண் ஔரங்காபாத் சதார் மருத்துவமனைக்கு மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளார். தற்போது இரு குற்றவாளிகளும் தலைமறைவாக உள்ளனர், அவர்களை பிடிக்க போலீசார் தேடிவருகின்றனர். இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.