கர்நாடக மாநிலம் தங்கவயலில் லகிதாஸ்ரீ(21) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த நவீன்(24) என்பவருடன் நேற்று திருமணம் நடந்தது. இவர்களது திருமணம் நவீனின் சகோதரி மோனிகா வீடிருக்கும் பகுதியில் நடந்தது.

அதன் பின் மணமக்கள் மோனிகாவுக்கு தெரிந்தவர் வீட்டில் தனி அறையில் இருந்துள்ளனர். அப்போது திடீரென அலறல் சத்தம் கேட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் கதவை திறந்து பார்த்த போது, இருவரும் ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்தனர். உடனடியாக உறவினர்கள் இவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு மருமகளை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தகவல் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து மருமகனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து மனமக்களின் உறவினரிடம் விசாரணை நடத்தினர்.

மேலும் நவீனுக்கு நினைவு திரும்பிய பிறகு தான் இந்த  சம்பவத்திற்கான காரணம் என்னவென்று தெரியவரும் என்று கூறினார். திருமணமான நாளே மணமக்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு மணமகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.