தமிழ் சினிமாவில் லேடிஸ் சூப்பர் ஸ்டார் ஆக திகழ்ந்து கொண்டிருக்கும் நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தம்பதியினர் முதலாமாண்டு திருமண நாளை இன்று கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் திருமண நாளை கொண்டாடும் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா தங்களின் இரட்டை மகன்களுடன் இருக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.

நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், என் உயிரோடு ஆதாரம் நீங்கள்தானே.. நிறைய மகிழ்ச்சி தருணங்களுடன் இந்த ஒரு ஆண்டு நிறைவடைந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். தற்போது தனது மகன்களுடன் இருக்கும் புகைப்படங்களை முதன்முறையாக வெளியிட்டு உள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Vignesh Shivan இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@wikkiofficial)