நாமக்கல் அருகே முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 காசுகள் உயர்ந்து ரூ.5.70ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முட்டை கொள்முதல் விலை ரூ.5.70ஐ தொடுவது என்பது தமிழகத்தில் கோழிப்பண்ணை வரலாற்றில் இதுவே முதல்முறையாகும். கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டுக்கு கேக் தயாரிப்புக்காக முட்டை தேவை அதிகரிப்பால் விலை உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனால், சில்லறை விற்பனையில் முட்டை விலை ரூ.7.50ஐ தாண்டும் என கூறப்படுகிறது. நாமக்கல்லில் முட்டை விலை வரலாறு காணாத அளவு உயர்ந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.