திருநெல்வேலியில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது, ராமதாஸ் அன்புமணி ராமதாஸ் ஆகியோருக்கு இடையே நடக்கும் பிரச்சனைக்கு பின்னால் பாஜக இல்லை. திமுகவை வீழ்த்துவதற்கு அனைத்து கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும்.

அதிமுக பாஜக கூட்டணி உடைந்து விடும் என்பது தான் திருமாவளவனின் எண்ணம். திமுக கூட்டணியில் இருந்து திருமாவளவன் வெளியேற வேண்டும் என்பதுதான் எனது விருப்பமாக உள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தலில் கூட்டணியை நம்பி மட்டுமே முதலமைச்சர் மு.க ஸ்டாலின் களத்தில் இறங்குகிறார்.

தேர்தல் வாக்குறுதியில் அறிவித்த பெரும்பாலான திட்டங்களை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நிறைவேற்றவே இல்லை. பொதுமக்கள் சொத்துவரி உயர்வு, மின் கட்டண உயர்வு ஆகியவற்றால் மிகவும் சிரமப்படுகின்றனர். பத்து மாத காலத்திலாவது மாதந்தோறும் மின் கட்டணம் திட்டத்தை நிறைவேற்றவில்லை என்றால் வரவிருக்கும் பாஜக ஆட்சியில் நிறைவேற்றப்படும் என கூறினார்.