இந்திய குடிமக்கள் அனைவருக்கும் வாக்குரிமை வழங்கப்பட்டுள்ளது. இது ஜனநாயக கடமையாகும். இவ்வாறு வாக்களிப்பதற்கு மக்களுக்கு தேவையான ஆவணமாக கருதப்படுவது வாக்காளர் அட்டை. 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் அனைவருமே வாக்களிக்கும் விதமாக வாக்காளர் அட்டை பெறுவார்கள். எனவே 18 வயது பூர்த்தியான அவர்களுடைய பெயரை வாக்காளர் பட்டியல் சேர்ப்பது அவசியம்.

இந்நிலையில் வேட்புமனு தாக்கலுக்கு 10 நாட்களுக்கு முன்பு வரை பொதுமக்கள் வாக்காளர் அடையாள அட்டையில் முகவரி மாறுதலுக்கு விண்ணப்பிக்கலாம் என்று சத்ய பிரதா சாகு அறிவித்துள்ளார். வேட்பாளர்களின் அத்துமீறல்களை பொதுமக்கள் சி-விஜில் செயலி மூலம் புகார் அளிக்கலாம்; புகார் அளிப்பவர் குறித்த விவரங்கள் ரகசியம் காக்கப்படும் எனக் கூறிய அவர், தேவையான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கைவசம் உள்ளதாக தெரிவித்தார்.