குவைத் நாட்டில் மங்கப் நகரத்தில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று அதிகாலையில் பயங்கரமான தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் 40 இந்தியர்கள் உட்பட 49 பரிதாபமாக உயிரிழந்தார்கள். வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் அதிகம் தங்கியிருந்த இதில் மொத்தம் ஆறு மாடிகள் உள்ளது. இதற்கு சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்தது தான் விபத்துக்கான காரணம் என்று முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் குவைத் தீ விபத்து நடந்த அடுக்குமாடி குடியிருப்பு பகுதிக்கு பக்கத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார்.

இவர் விருதுநகரை சேர்ந்தவர். இவர் குவைத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் சேனல் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியி,ல் குவைத்தில் பகலில் வெப்பம் அதிகமாக இருப்பதால் பலரும் இரவு பணிக்கு தான் செல்வார்கள். இந்த நிலையில் காலையிலேயே சிலர் சமையல் செய்துள்ளார்கள். இந்த கட்டடத்தின் அடித்தளத்திலேயே சமையலறை இருக்கிறது. இங்கிருந்து தான் தீ எல்லா இடத்திற்கும் பரவி இருக்கிறது.

அதிகாலை தீ விபத்து ஏற்பட்டதால் சிலர் மூச்சுத்திணறி இறந்து விட்டார்கள். சிலர் தப்பிக்க முயன்று கீழே குதித்து விட்டார்கள் .ஆனால் அவர்களுக்கு என்ன ஆனது என்று தெரியவில்லை. இந்த தீ விபத்து குறித்து இன்னொருவர் கூறுகையில், விபத்து நடந்த கட்டிடத்திற்கு பின்புறம் தான் தங்கி இருந்தோம். 41  இந்தியர்கள்  உயிரிழந்தார்கள் என்று சொல்கிறார்கள். புகை சூழ்ந்திருந்ததை பார்த்ததுமே உடனடியாக முகத்தில் துணியை கட்டிக்கொண்டு வெளியேறி விட்டோம். பலருக்கும் மூச்சு திணறல் வந்துவிட்டதால் தப்ப முடியவில்லை என்று கூறியுள்ளார்.