நதியின் அலைகளுக்கு நடுவே ஜாலியாகக் குளித்துக் கொண்டிருந்த ஒரு பெண்ணுக்கு, ஒரு சிறிய தவறு மரண பயத்தைக் காட்டியுள்ளது. இது தொடர்பான வீடியோ இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகிப் பார்ப்பவர்களின் நெஞ்சைப் பதற வைக்கிறது. அந்த வீடியோவில், பெண் ஒருவர் நதியில் நிதானமாகக் குளித்துக் கொண்டிருக்கிறார். அப்போது அவரது காலடியில் ஏதோ ஒன்று உரசுவதை உணர்கிறார்.
அது மீனாகவோ அல்லது மரக்கட்டையாகவோ இருக்கும் என்று நினைத்து, அவர் எதார்த்தமாகத் தண்ணீருக்குள் கையை விட்டு அதை வெளியே இழுக்கிறார். ஆனால், வெளியே வந்தது மீன் அல்ல; அது ஒரு முதலைக்குட்டி! அதைக் கையில் பார்த்த அடுத்த நொடியே அந்தப் பெண் மரண பயத்தில் அலறியடித்துக் கொண்டு அதைக் கீழே போட்டுவிட்டு கரையை நோக்கி ஓடுகிறார்.
அதிர்ஷ்டவசமாக அந்த முதலைக்குட்டி அவரைத் தாக்கவில்லை. அந்த இடத்தில் முதலையின் கூட்டம் ஏதேனும் இருந்திருந்தால் நிலைமை விபரீதமாகி இருக்கும். இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட இந்த வீடியோவை இதுவரை 10 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். இதைப் பார்த்த நெட்டிசன்கள், “அந்தப் பெண்ணுக்கு இருந்த தைரியம் முதலைக்கே இருந்திருக்காது” எனத் தமாஷாகக் கமெண்ட் செய்து வருகின்றனர்.
