சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் சென்ற 2002-ம் வருடம் வெளியாகிய பாபா திரைப்படம் மிகப் பெரிய சரிவை சந்தித்தது. இந்த நிலையில் புது பொலிவுடன் பாபா திரைப்படத்தின் கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீரிலீஸ் செய்யப்பட்டது. தற்போது ரஜினியின் மற்றொரு திரைப்படத்தையும் ரீ ரிலீஸ் செய்யும் முயற்சியில் தயாரிப்பாளர் இருக்கிறார். ரஜினி தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

சன்பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படம் ஆகஸ்ட் மாதம் வெளியாக உள்ளது. இந்த நிலையில் கலைப்புலி எஸ் தாணு பேட்டி அளித்தபோது, பாபா படத்தை போன்று கபாலி திரைப்படத்தையும் ரீ ரிலீஸ் செய்யும் முடிவில் இருப்பதாக கூறி இருந்தார். அதோடு இப்படத்தின் கிளைமாக்ஸ் மாற்றியமைக்கப்படும் எனவும் உறுதியளித்திருந்தார். இச்செய்தி ரஜினி ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.