
தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் அனிருத். இவர் கைவசம் முன்னணி நடிகர்களின் படங்கள் ஏராளம் இருக்கிறது. ஒரே நேரத்தில் பல படங்களுக்கு இசையமைக்கும் அனிருத் சமீப காலமாக தெலுங்கு படங்களிலும் கவனம் செலுத்த துவங்கியுள்ளார். இவரது இசையமைப்பில் கடைசியாக தெலுங்கில் வெளியான படம் தேவாரா.
இந்த படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. இந்நிலையில் அனிருத் மீண்டும் தெலுங்கு படம் ஒன்றுக்கு இசை அமைக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தெலுங்கு திரை உலகின் மெகா ஸ்டார் சிரஞ்சீவி புதிதாக நடிக்க இருக்கும் படத்திற்கு தான் அனிருத் இசை அமைக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.