தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர் ராஷ்மிகா மந்தனா. இவர் தமிழில் விஜயுடன் இணைந்து வாரிசு படத்தில் நடித்துள்ளார். ஐவரும் நடிகர் விஜய் தேவரகொண்டாவும் கடந்த சில வருடங்களாகவே  காதலித்து வருவதாக கூறப்பட்டது. ஆனால் இருவரும் தங்களுடைய காதலை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. அவ்வப்போது இருவரும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் மூலமாக ரசிகர்களிடம் சிக்கிக் கொள்வார்கள் .இந்த நிலையில் நடிகை ராஷ்மிகா தன்னுடைய முகத்தை மறைத்துக் கொண்டு ஹோட்டல்  ஒன்றிற்கு சென்றுள்ளார்.

அப்போது அங்கிருந்த போட்டோ கலைஞர்கள் ராஷ்மிகாவை அடையாளம் கண்டு புகைப்படம் எடுத்துள்ளார்கள். அவர் உள்ளே சென்று சில நிமிடங்களிலேயே ஹோட்டலின் பின்புறமாக இருந்து நடிகர் விஜய் தேவரகொண்டா மாஸ்க் மற்றும் தொப்பி அணிந்து கொண்டு ஹோட்டலுக்குள்ளே சென்றுள்ளார். இருவரும் உள்ளே சென்ற வீடியோ வைரலாக பரவி வருகிறது. இதனை அடுத்து ரசிகர்கள் இவர்கள்  காதலிக்கிறார்களா? என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.