
இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஏர்டெல் மற்றும் ஜியோ ஆகிய நிறுவனங்கள் சமீபத்தில் ரீசார்ஜ் கட்டணங்களை பல மடங்கு உயர்த்தி வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தன. இதனைத் தொடர்ந்து அரசுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் மலிவு கட்டண திட்டங்களை அறிவித்து வாடிக்கையாளர்களை தக்கவைத்து வருகிறது.
இந்த நிலையில் தொலை தொடர்பு நிறுவனமான ஏர்டெல் தனது மூன்று மொபைல் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை மீண்டும் உயர்த்தி உள்ளதாக அறிவித்துள்ளது. சமீபத்தில் ப்ரீபெய்டு மற்றும் போஸ்ட் பெய்டு திட்டங்களின் விலைகளை 12 விழுக்காடு வரை உயர்த்தியது. இது ஜூலை 3 முதல் அமலுக்கு வந்தது. தற்போது ஏர்டெல் தனது 3 டேட்டா பேக்குகளின் விலையை 60 ரூபாய் உயர்த்தியுள்ளது. இதனால் அந் நிறுவனம் எடுத்த இந்த முடிவால் வாடிக்கையாளர்கள் உச்சகட்ட கோபத்தில் உள்ளனர்.