
தற்போதுதான் மக்கள் கொரோனாவில் இருந்து மீண்டுகொஞ்சம் நிம்மதியாக இருக்கிறார்கள். இந்நிலையில் மீண்டும் ஒரு கொடிய நோய் பரவ வாய்ப்பு இருக்கிறது என மருத்துவ அறிஞர்கள் அதிர்ச்சியை கிளப்பியுள்ளார். அதாவது H5N1 என்ற புதிய பறவைக்காய்ச்சல், சர்வதேச நோய் பரவலாக மாறலாம் என மருத்துவ துறையை சேர்ந்த அறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில், இந்த நோய் கொரோனா நோய் பரவலை விட 100 மடங்கு கொடியதாக இருக்கும் எனவும், இறப்பு விகிதமும் கொரோனாவை விட அதிகமாக இருக்கும் என்றும் தகவல்கள் வெளியாகியிருக்கிறது. இதற்கான அறிகுறிகள் காய்ச்சல், இருமல், தொண்டை வலி, குளிர் காய்ச்சல், மூச்சு விடுவதில் சிரமம் ஆகியவையாகும்.