உலகம் முழுவதும் கடந்த 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் பாதிப்பு பரவத் தொடங்கிய நிலையில் அனைவருக்கும் மரண பயத்தை காட்டியது. கொத்து கொத்தாக மக்கள் மடிந்து இறுதி சடங்குகளை செய்வதற்கு போதிய இடம் இல்லாமல் தவித்தனர். இந்த நிலையில் கொரோனாவை விட 100 மடங்கு மோசமான வைரசாக அமெரிக்காவின் டெக்ஸாஸில் பரவி வரும் பறவை காய்ச்சல் குறித்து அமெரிக்க விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

பறவை காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மக்கள் அதிக அளவில் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. 2003 முதல் தற்போது வரை HN51 வைரஸ் நோயால் பாதிக்கப்பட்ட மனிதர்களில் 52% பேர் உயிரிழந்துள்ளதாகவும் உலக சுகாதார அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது. டெக்சாஸில் பாதிப்பு உறுதி செய்யப்பட்ட மக்களை சோதித்த பிறகு இந்த தகவலை விஞ்ஞானிகள் வெளியேற்றுள்ளனர்.