தெலுங்கானா மாநிலத்தில் உள்ள மெட்சால் பகுதியில் ஒரு தனியார் நிறுவனம் அமைந்துள்ளது. இங்கு ஒரு 23 வயது பெண் வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த 22 ஆம் தேதி செகந்திராபாத் செல்லும் ரயிலில் ஏறிய நிலையில் பெண்கள் பெட்டியில் பயணம் செய்து கொண்டிருந்தார். அவருடன் பயணித்த இரண்டு பெண்கள் ஒரு நிறுத்தத்தில் இறங்கிய நிலையில் அந்த இளம் பெண் மட்டும் தனியாக ரயிலில் இருந்தார். அப்போது ஒரு 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் அந்த ரயிலில் ஏறி இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி செய்தார்.

இதனால் பயந்து போன அந்த பெண் அவரிடம் இருந்து தப்பிப்பதற்காக ஓடும் ரயிலில் இருந்து கீழே குதித்து விட்டார். இதில் அவருக்கு முகம் உட்பட உடம்பில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் அந்த வழியாக சென்றவர்கள் பெண்ணை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அந்த இளம் பெண்ணின் உடல்நிலை சீரான நிலையில் போலீசாரிடம் அந்த வாலிபரை தற்போது பார்த்தால் கூட அடையாளம் காட்டுவேன் என்று கூறியுள்ளார். மேலும் அந்த இளம் பெண்ணின் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.