
தமிழகத்தில் ஆசிரியர்களே மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் செய்திகள் அடிக்கடி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. மாணவிகளிடம் பள்ளி ஆசிரியர்கள் பாலியல் அத்துமீறலில் ஈடுபடுவது தெரிய வந்தால் அவர்களின் கல்வி சான்றிதழ் ரத்து செய்யப்படுவதோடு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளி கல்வித்துறை ஏற்கனவே எச்சரித்துள்ளது.
இந்நிலையில் தற்போது மீண்டும் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. அதாவது நீலகிரி மாவட்டத்தில் அரசு பள்ளியில் படிக்கும் 21 மாணவிகளுக்கு அறிவியல் ஆசிரியர் செந்தில்குமார் (50) என்பவர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் தற்போது அவரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்துள்ளனர்.
அதாவது பள்ளியில் பாலியல் விழிப்புணர்வு தொடர்பான நிகழ்ச்சி நடந்தபோது மாணவி ஒருவர் தைரியமாக ஆசிரியர் செய்த கொடுமைகளை போலீஸிடம் கூற பின்னர் விசாரணை நடத்தியதில் 21 மாணவிகளுக்கு அவர் பாலியல் தொல்லை கொடுத்தது தெரிய வந்தது. மேலும் இதைத் தொடர்ந்து போலீசார் அவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.