மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் ரீனா ஷேக் என்பவர் வசித்து வருகிறார். கணவரை பிரிந்த இவர் தன்னுடைய இரண்டரை வயது பெண் குழந்தையுடன் தனியாக வசித்து வருகிறார். இவர் சம்பவ நாளில் தன்னுடைய குழந்தை மயங்கி விட்டதாக கூறி மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அவர் மருத்துவரிடம் திடீரென குழந்தைக்கு வலிப்பு ஏற்பட்டு அதனால் மூச்சு திணறி மயங்கி விழுந்து விட்டதாக கூறினார்.

அப்போது மருத்துவர்கள் சிகிச்சை வழங்கிய நிலையில் சிறிது நேரத்தில் குழந்தை இறந்துவிட்டது. இதனால் குழந்தையின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் பிரேத பரிசோதனை அறிக்கையில் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் தெரிய வந்தது. அதாவது குழந்தை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதும் அதனால் மூச்சு திணறி இறந்ததும் தெரிய வந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த மருத்துவமனை நிர்வாகம் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்த நிலையில் அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து குழந்தையின் தாயை பிடித்து விசாரணை நடத்தியதில் பல தகவல்கள் தெரியவந்தது.

அதாவது ரீனா பர்கான் ஷேக் என்ற வாலிபருடன் கள்ள உறவில் இருந்துள்ளார். இவர் சம்பவ நாளில் ரீனாவின் வீட்டிற்கு வந்த நிலையில் அங்கிருந்த குழந்தையை பலாத்காரம் செய்ததும் அதனால் குழந்தை மூச்சு திணறி இறந்ததும் தெரியவந்தது.

தன் குழந்தையை கள்ளக்காதலன் பாலியல் பலாத்காரம் செய்த போது அதனை ரீனா வேடிக்கை பார்த்ததோடு மூச்சு திணறி இறந்து விட்டதாக நாடகமாடியுள்ளார். மேலும் இவர்கள் இருவர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ள நிலையில் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.