உலகம் முழுவதும் தற்போது 5ஜி சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில் சீனா மின்னல் வேகத்தில் 10ஜி சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது ஹூவாய் தொழில்நுட்ப நிறுவனம் சீனாவின் யூனிகாம் தொலைதொடர்பு நிறுவனத்துடன் சேர்ந்து 10ஜி ஸ்டாண்டர்ட் பிராண்ட்பேண்ட் நெட்வொர்க்கை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த தொழில்நுட்பம் சீனாவில் உள்ள சியோங்கான் நியூ என்ற பகுதியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்மூலம் 3 மில்லி வினாடிகளில் 9834 Mbps வேகத்தில் பதிவிறக்கம் செய்யலாம். இதேபோன்று 1008 Mbps வேகத்தில் பதிவேற்றமும் செய்ய முடியும். மேலும் இந்தியா உட்பட பல நாடுகளில் 5ஜி சேவையே தற்போது தான் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில் சீனா மிகவும் அட்வான்ஸாக 10ஜி சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது உலக அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.