
தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் சேவைகளை எளிதாக்க மக்களின் வசதிக்காக அரசு சார்பில் புதுப்புது வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் மக்களும் பயனடைந்து வருகின்றனர். இந்த நிலையில் மின்சார களப்பணியாளர்களுக்கு புதிய மொபைல் செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
மின் கட்டணம் செலுத்தாமல் உள்ள இணைப்புகள், கட்டணம் செலுத்திய இணைப்புகள், மீன் பயன்பாடு கணக்கெடுக்கப்பட்ட மற்றும் கணக்கெடுக்கப்படாத விவரங்களையும், மின் இணைப்பு பெயர் மாற்றம், மின் பளு குறைப்பு, மின்னகம் சேவை மையம், நுகர்வோர் அழிக்கும் புகார் மற்றும் அதன் மேல் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தும் இதில் அறிந்து கொள்ளலாம்.