இஸ்ரேல் ஹமாஸ் இடையே கடந்த மாதம் 7 ஆம் தேதி தொடங்கி இன்று வரை போர் தொடர்ந்து வருகிறது. இந்தப் போரில் இரண்டு தரப்பினருக்கும் பல்வேறு இழப்புகள் ஏற்பட்டு வருகிறது. இதனிடையே காசாவுக்கு வழங்கப்பட்டு வந்த மின்சாரமும் தடைப்பட்டது.

இதனால் அங்குள்ள மருத்துவமனைகளில் போதிய மின்சார வசதி இல்லாமல் பல்வேறு உயிரிழப்புகள் ஏற்பட தொடங்கியது. இது குறித்து காசாவின் மிகப்பெரிய மருத்துவமனையான அல் ஷிபா மருத்துவமனையின் இயக்குனர் கூறுகையில் ஏழு குழந்தைகள் உட்பட அவசர சிகிச்சை பிரிவில் இருந்த 29 நோயாளிகளையும் சேர்த்து 179 பேரை மருத்துவமனை வளாகத்திற்கு உள்ளேயே புதைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

மருத்துவமனைக்கு தேவையான அத்தியாவசிய மின்சாரம் போன்றவை துண்டிக்கப்பட்டது தான் உயிரிழப்புகளுக்கு காரணம் என்றும் இன்னும் பல உயிர்கள் ஆபத்தில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.