பாகிஸ்தான் நாட்டில் கைபர் பக்துங்குவா மாகாணம் உள்ளது. இங்கிருந்து பஞ்சாப் மாகாணத்திற்கு ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மினி லாரியில் பயணம் செய்தனர். இந்த மினி லாரி குஷப் அருகே உள்ள ஒரு மலைப்பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து வாகனம் பள்ளத்தாக்கில் பாய்ந்து கவிழ்ந்தது.

இந்த கோர விபத்தில் குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேர் பரிதாபமாக இறந்தனர். அதன் பிறகு பலத்த காயங்களுடன் 9 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.