மிதுனம் ராசி அன்பர்களே,

இன்று எடுத்த வேலையை முடிக்க அலைச்சல்கள் அதிகரிக்கும். செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். அசதி சோர்வு வந்து நீங்கும். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்தியோகத்தில் மேல் அதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது. நண்பர்கள் உங்களுக்கு ஆதரவாக செயல்படுவார்கள். வெளிவட்டார தொடர்புகள் விரிவடையும். விழிப்புணர்ச்சியுடன் செயல்படுவது நல்லது.

குடும்பத்தில் இருப்பவர்களால் வீண் தொல்லைகள் ஏற்பட்டு பின்னர் சரியாகும். சில இடங்களில் கவனமாக பேசுவது நல்லது. இன்று பெண்களுக்கு சின்ன சின்ன விஷயங்களில் வரும் கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும். நல்லதை கற்றுக் கொள்வீர்கள். நேர்மையுடன் செயல்படுவீர்கள். எதார்த்தமாக நடந்து கொள்வீர்கள்.

இன்று மாணவர்கள் உற்சாகமாக காணப்படுவீர்கள். முழு முயற்சியால் கண்டிப்பாக வெற்றி பெற முடியும். கல்வி மீது ஆர்வம் அதிகரிக்கும். இன்று சித்தர்கள் வழிபாட்டையும் சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு

அதிஷ்ட எண்: ஆறு மற்றும் ஏழு மற்றும் ஒன்பது

அதிர்ஷ்ட நிறம்: பிங்க் மற்றும் மஞ்சள் நிறம்