
தமிழக முதல்வர் ஸ்டாலின் நெல்லையில் களப்பயணம் மேற்கொண்டுள்ளார். அப்போது அவர் பிரபலமான திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா கடைக்கு சென்று அல்வா சாப்பிட்டார். இது தொடர்பான புகைப்படத்தை அதிமுக ஐடி விங் பகிர்ந்து நாட்டில் எவ்வளவோ அமளி துமளி நடந்து கொண்டிருக்கிறது. இங்க பாரு ஒருத்தர என்கிற விதத்தில் முதல்வர் ஸ்டாலின் போட்டோவை பகிர்ந்து கவுண்டமணி காமெடியையும் பகிர்ந்து நக்கல் செய்யும் விதமாக பதிவிட்டு இருந்தனர்.
இதற்கு தற்போது திமுக ஐடி விங் பதிலடி கொடுத்துள்ளது.அதில் எடப்பாடி பழனிச்சாமி ஒரு ஹோட்டலில் அமர்ந்து சாப்பிடுவது போன்ற புகைப்படத்தை பகிர்ந்துள்ளனர். அதனுடன் டேய் மிச்சர் குரூப் இங்கே என்னடா புளிப்பு காமெடி பண்ணிட்டு இருக்கீங்க என்று பதிவிட்டுள்ளனர். மேலும் இதற்கு அதிமுகவினரும் பதிலடி கொடுத்து வருகிறார்கள்.
டேய் மிச்சர் குரூப்பு இங்க என்னடா புளிப்பு காமெடி பண்ணிட்டு இருக்கீங்க 😁 🤣 https://t.co/8sM243CHtG pic.twitter.com/giSDQZpHPh
— DMK IT WING (@DMKITwing) February 7, 2025