தமிழகத்தில் புயல் காரணமாக சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்ததால் மழை நீர் வெள்ளம் போல சூழ்ந்து நிற்கிறது. இதனை வெளியேற்றும் பணிகளில் அரசு தீவிரம் காட்டி வரும் நிலையில் மழை நீர் சூழ்ந்து மின்சாரம் துண்டிக்கப்பட்ட செல்போன் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்ட சென்னை ஒட்டுமொத்தமாக நீரில் மூழ்கியுள்ளது என்று அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2015 ஆம் ஆண்டு பெருவெள்ளம், 2016 ஆம் ஆண்டு வர்தா புயல் ஆகியவற்றின் தாக்கங்களை அனுபவித்த பிறகும் அதிலிருந்து பாடங்களை கற்றுக் கொள்ளவில்லை. இதனால் தற்போது வந்த புயலிலும் தமிழக அரசு தடுமாறி வருகிறது என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.