தமிழக வெற்றி கழகத்தின் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தின் போது 38 மாவட்டங்களுக்கு மொத்தம் 120 மாவட்ட செயலாளர்களை விஜய் நியமித்தார். தமிழக வெற்றி கழகத்தில் பதவி வாங்குவதற்கு 15 லட்ச ரூபாய் பேரம் பேசியதாக புகார் எழுந்த நிலையில் தமிழக வெற்றி கழகத்தில் பதவி வாங்க பணம் கொடுப்பது தெரிய வந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பதவி பறிக்கப்படும் எனவும் விஜய் எச்சரித்தார். இந்நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகள் அனைவரையும் தனித்தனியாக அழைத்து விஜய் ஆலோசித்த நிலையில் திடீரென பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தை மட்டும் வெளியே நிற்குமாறு விஜய் கூறிவிட்டார்.

இந்த விவகாரம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பேசும் பொருளாக மாறிய நிலையில் இதற்கு காரணம் தமிழக வெற்றி கழகத்தின் தேர்தல் வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமி தான் என்று கூறுகிறார்கள். அதாவது சமீபத்தில் ஜான் ஆரோக்கிய சாமியின் ஆடியோ ஒன்று வெளியானது. அப்போது புஸ்ஸி ஆனந்த் இருக்கும்போது விஜயிடம் என்ன பேசினாலும் அது வெளியே கசிந்து விடுவதாக அவர் கூறினார். மேலும் இதன் காரணமாகத்தான் மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தும்போது விஜய் அவரை வெளியே நிற்க வைத்ததாக கூறப்படுகிறது.