கர்நாடகாவில் சட்டசபைக்கான பதவிக்காலம் வருகின்ற மே 24ஆம் தேதி உடன் முடிவடைவதால் அதற்குள் தேர்தல் நடத்தி புதிய சட்டசபை அமைக்க வேண்டிய அவசியம் உள்ளது. இதனைத் தொடர்ந்து தற்போது தேர்தலுக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் 80 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் அனைவரும் வீட்டில் இருந்தவாறு வாக்களிக்க வசதிகள் செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் முதல்முறையாக 80 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வீட்டில் இருந்தபடியே வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

அதற்காக 2d என்ற படிவம் பெற்று அதனை பூர்த்தி செய்து 80 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் அனைவரும் தங்களின் வாக்குப்பதிவை வீட்டில் இருந்தபடியே வாக்களிக்கலாம். அதனைப் போலவே மாற்றுத்திறனாளிகளுக்காக சாக்ஷம் என்ற மொபைல் செயலையும் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். எனவே தாங்கள் எந்த வகையில் ஓட்டளிக்கலாம் என அவர்களே முடிவு செய்து கொள்ளலாம்.