உத்திரபிரதேச மாநிலத்தில் ஷிப்ரா பதக் என்ற பெண் வசித்து வருகிறார். இவரை தண்ணீர் பெண் என்று அழைப்பர். இவர் மாசடைந்து வரும் கோமதி நதியை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் 690 கிலோமீட்டர் தூரம் பாதயாத்திரை மேற்கொண்டுள்ளார். இது பற்றி ஷிப்ரா கூறியதாவது, நதிக்கரையோரம் வசிக்கும் மக்கள் நதியை பற்றி மிகவும் கவலைப்படுகிறார்கள்.

ஆனால் என்ன செய்வது என்று அவர்களுக்கு தெரியவில்லை. நான் இந்த யாத்திரையின் மூலம் நதியை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க அவர்களை ஊக்கப்படுத்த முயற்சி செய்கிறேன். இதன் மூலம் நல்லது நடக்கும் என நம்புகிறேன் என்று கூறியுள்ளார். மேலும் மாசடைந்து வரும் நதியை பாதுகாப்பதற்காக ஒரு பெண்மணி தைரியமாக 690 கிலோமீட்டர் தூரம் பாதயாத்திரை மேற்கொண்டுள்ளது பலரது மத்தியிலும் பாராட்டை பெற்றுள்ளது.