
புற்றுநோயை எதிர்கொண்டு வெற்றிகரமாக மீண்ட 51 வயதான லூயிஸ் பெர்னடெட் புச்சர், தற்போது பெண்களுக்கு உற்சாகம் அளிக்கும் விதமாக மேலாடை இல்லாமல் மாரத்தான் ஓடி உலகளவில் பாராட்டை பெற்று வருகிறார்.
2022ஆம் ஆண்டு, லண்டன் மாரத்தானுக்கு பயிற்சி எடுத்து கொண்டிருந்தபோது, லூயிஸ் ‘லொபுலர் ப்ரெஸ்ட் கேன்சர்’ எனும் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து, அவருக்கு மஸ்டெக்டமி அறுவை சிகிச்சை செய்யப்பட்டதுடன், கதிர்வீச்சு சிகிச்சையும் அளிக்கப்பட்டது.
View this post on Instagram
அறுவை சிகிச்சைக்குப் பிறகு ஆறாவது வாரத்தில், மேலும் கதிர்வீச்சு சிகிச்சை முடிந்த மூன்றாவது நாளிலேயே, லூயிஸ் மீண்டும் லண்டன் மாரத்தான் ஓட்டத்தில் பங்கேற்றார்.
தற்போது, புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், மார்பக அகற்றப்பட்ட நிலையிலும் தனது உருவத்தை மறைக்காமல், மேலாடை இல்லாமல் ஓடி வருகிறார். “இந்தக் காயங்கள் என் உயிரைக் காக்க உதவின. நான் ஏன் அவற்றை மறைக்க வேண்டும்?” என லூயிஸ் கூறியுள்ளார்.
சமீபத்தில் பிரிட்டனின் ‘This Morning’ நிகழ்ச்சியில் மேல் ஆடையில்லாமல் தோன்றி, தனது அனுபவங்களை பகிர்ந்தார். அவரது இந்த துணிச்சலான செயலுக்கு சமூக ஊடகங்களில் பெரும் ஆதரவு கிடைத்துள்ளது.