நமது உடலில் கெட்ட கொழுப்பின் அளவு அதிகரிக்கும் போது கொலஸ்ட்ரால் ஏற்பட்டு அது மாரடைப்பு, இதயத்திற்கான ரத்த ஓட்டம் குறைவது, பக்கவாதம் போன்ற அபாயங்களை அதிகரிக்க செய்கிறது. துரித உணவுகளை உண்பதால் கொலஸ்ட்ரால் பிரச்சனை ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது. இந்த பதிவில் கொலஸ்ட்ராலை குறைக்க எதை சாப்பிடலாம் என்பது பற்றி பார்க்கலாம்.

இஞ்சி

இஞ்சி சாப்பிடுவதன் மூலம் உடலில் உள்ள கெட்ட கொழுப்பின் அளவு குறைக்கலாம். குறிப்பாக இஞ்சியை சமைத்து சாப்பிடாமல் பச்சையாக சாப்பிடுவதன் மூலமே பல நன்மைகள் கிடைக்கும்.

புதினா

வாரத்திற்கு ஒரு முறை புதினா இலைகளை பச்சையாக சாப்பிடுவதன் மூலம் கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து கட்டுக்குள் வைத்திருக்க முடியும்.

பூண்டு

உணவுகளில் ருசிக்காக சேர்க்கப்படும் பூண்டை சமைக்காமல் பச்சையாக சாப்பிட்டு வந்தால் உடலில் இருக்கும் கெட்ட கொழுப்பின் அளவு குறையும் என்று கூறப்படுகிறது.

பேரிச்சம்பழம்

பேரிச்சம்பழத்தை சாப்பிடுவதனால் ரத்தக்குழாய்களை அடைக்கும்  கெட்ட கொழுப்பை கரைத்து இதயத்திற்கான ரத்த ஓட்டம் சீராக கிடைக்க வழி செய்கிறது.