சுக்கு உணவில் மட்டுமல்லாது மருத்துவத்திலும் உயர்ந்து நிற்க கூடிய ஒன்றாகும். சுக்கினால் தீரும் உடல் நலக் கோளாறுகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

மதிய உணவில் சுக்கை சேர்த்துக் கொண்டால் வாயு பிரச்சனைகள் ஏற்படாது.

சுக்குடன் தண்ணீர் சேர்த்து நன்றாக குழைத்து  நெற்றியில் பத்து போட்டால் தலைவலி குறையும். அதையே தொண்டையில் பூசினால் தொண்டை கரகரப்பு மாறும்.

பித்தம் காரணமாக தலைசுற்றல், வாந்தி, குமட்டல் ஏற்பட்டால் சுக்கு பொடியுடன் தேன் கலந்து சாப்பிட வேண்டும்.

சுக்குடன் தேவையான அளவு நெய், வெல்லம் சேர்த்து குழைத்து தினமும் இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால் நெஞ்சு சளி மாறும்.

சர்க்கரையுடன் சுக்கு பொடி சேர்த்து சாப்பிட்டால் வயிற்று வலி குணமாகும்.

சுக்கு பொடியுடன் துளசி இலைகளை 15 நிமிடங்கள் கொதிக்க வைத்து சிறிதளவு தேன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் ஆஸ்துமா குணமாகும்.