தமிழில் உல்லாச பறவைகள் மற்றும் வாணி ராணி உள்ளிட்ட பல திரைப்படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் சிவி ராஜேந்திரன் மனைவி ஜானகி மாரடைப்பால் காலமானார். 74 வயதாகும் இவர் இன்று உயிரிழந்த நிலையில் திநகர் அரகொடி சாலையில் உள்ள இல்லத்தில் அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. திரை பிரபலங்கள் மற்றும் உறவினர்கள் உள்ளிட்ட பலரும் அஞ்சலி செலுத்தி வரும் நிலையில் அவரது உடல் இன்று மாலை அடக்கம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது மறைவிற்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.