
அஜித் மற்றும் த்ரிஷா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் குட் பேட் அக்லி. இந்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். இந்த படம் ஏப்ரல் பத்தாம் தேதி ரிலீசாக உள்ளது. இந்த படத்தில் திரிஷா ஹீரோயினாக நடித்துள்ள நிலையில் அவருடைய கதாபாத்திரத்தின் பெயர் படகுழுவால் அறிவிக்கப்பட்டது. அதாவது ரம்யா என்ற ரோலில் த்ரிஷா நடிக்கிறாராம்.
இந்த நிலையில் படத்தின் டீசர் வெளியீடு எப்போது என்று ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்திருந்த நிலையில் இன்று இரவு 7.03க்கு மணிக்கு டீசர் வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துளது. மேலும் டீசரின் நீளம் 1.34 நிமிடம் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தற்போது புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு.
#CinemaUpdate | “மாமே… சம்பவம் இருக்கு ரெடியா?” 💥😎
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார், த்ரிஷா உள்ளிட்டோர் நடிக்கும் ‘Good Bad Ugly’ திரைப்படத்தின் டீசர் இன்று மாலை 7.03 மணிக்கு வெளியாகவுள்ள நிலையில், புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு!#SunNews | #AjithKumar |… pic.twitter.com/eoEHlV8MDb
— Sun News (@sunnewstamil) February 28, 2025