வக்ஃப் வாரிய சட்ட திருத்தத்தை திரும்பப்பெற வலியுறுத்தி, சென்னையில் ஏப்ரல் 13 ஆம் தேதி மாபெரும் கோரிக்கை போராட்டம் நடைபெறும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தனது X  தளத்தில் காணொளி வெளியிட்ட அவர், “இந்த திருத்தம் தமிழர் உரிமைகளுக்கு எதிரானது. மானத்தமிழர்கள் அனைவரும் மறக்காமல் போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

“>

 

இந்த போராட்டம் நாளை காலை 10 மணிக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெறவுள்ளது. வக்ஃப் வாரிய சட்டத்தில் செய்யப்பட்ட திருத்தம், தமிழ் மக்கள் நிலங்களில் உரிமையை பறிக்கும் விதமாக இருப்பதாக சீமான் குற்றம்சாட்டியுள்ளார். எனவே, தமிழக உரிமைகளை பாதுகாக்க அனைவரும் ஒன்று கூட வேண்டிய நேரம் இது எனக் கூறி, அவரது பதில் உரையில் பரபரப்பாக பேசியுள்ளார்..