நாம் அனைவரும் மாத்திரை வாங்கும் போது அதில் ஒரு சில மாத்திரைகளில் சிவப்பு கோடு இருப்பதை கவனித்திருப்போம். ஆனால் அதற்கு என்ன அர்த்தம் உள்ளது என்பதை அறிந்திருக்க வாய்ப்பில்லை. இந்தியாவில் ஆண்டிபயோடிக் மருந்துகளின் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தீவிர நோய்களுக்கும் மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் இந்த மாத்திரைகள் எடுத்துக் கொள்ளப்படுவதால் இதனை குறைக்கும் நோக்கத்திலும் விழிப்புணர்வுக்காகவும் மாத்திரையின் பின்புறம் சிவப்பு கோடுகள் இடம் பெற்றுள்ளன.

சாதாரண காய்ச்சல் மற்றும் இருமல் தொடங்கி கடுமையான பாதிப்பை அளிக்கும் நோய்களுக்கும் கூட மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் ஆண்டிபயோடிக் மருந்துகளை பலரும் பயன்படுத்தி வருகிறார்கள். விற்பனை செய்யப்படும் சில ஆண்டிபயோடிக் மருந்துகளின் பின்புறத்தில் சிவப்பு நிற கோடுகள் இருப்பதை காண முடிந்தால் அது எதனைக் குறிக்கிறது என தெரிந்து கொள்ளுங்கள்.

அதாவது தேவையற்ற மருந்துகளின் பயன்பாடுகளை மற்றும் டிபி, மலேரியா, சிறுநீரகப் பாதை தொற்று போன்ற பல தீவிர நோய்களுக்கும் கூட ஆண்டிபயோடிக் மருந்துகள் விற்பனை நிலையங்களில் நடைபெறும் அதிக அளவிலான விற்பனையை கண்டிப்பதே சிவப்பு நிற கோட்டின் நோக்கமாகும். தீவிர நோய்களுக்கு விற்பனை நிலையங்களில் கிடைக்கும் ஆன்டிபயோடிக் மருந்துகளை சார்ந்து இருக்காமல் உடனே மருத்துவரை அணுக வேண்டும். சிவப்பு நிறக் கோடு இடம்பெற்ற மாத்திரைகளை மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் பயன்படுத்த வேண்டாம் எனவும் சமூக வலைத்தளங்களில் நோய் சிகிச்சைக்கான மருந்து என பரவும் செய்திகளையும் நம்ப வேண்டாம் என அரசு எச்சரிக்கிறது.