மாதவிடாய் சுகாதாரத்தை அடிப்படை உரிமையாக அரசு அங்கீகரித்துள்ளதாக முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். இந்நிலையில் மாதவிடாய் சுகாதாரத்தை மேம்படுத்துவதை கருத்தில் கொண்டு கேரள அரசு மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளிலும் சானிட்டரி நாப்கின் விற்பனை இயந்திரங்களை நிறுவுவதற்கான முடிவை எடுத்த்துள்ளது.

இந்த விற்பனை இயந்திரங்களின் அறிமுகம் பள்ளி சிறுமிகளின் நடைமுறைத் தேவைகளை நிவர்த்தி செய்வது மட்டுமல்லாமல் மாதவிடாய் சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வை ஊக்குவிக்கும் என்றும், ‘இந்த திட்டம் தடைகளை உடைத்து, ஆரோக்கியத்தை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும், மேலும் எங்கள் பெண்களை நம்பிக்கையுடன் உயர்வடையச் செய்கிறது’ என்று கேரள முதல்வர் தெரிவித்துள்ளார்.