
இன்றைய காலகட்டத்தில் மக்கள் மத்தியில் சேமிப்பு என்பது அதிகமாகிவிட்டது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பணவீக்கம் காரணமாக மக்கள் தங்களுடைய சேமிப்பிற்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்க தொடங்கிவிட்டனர். சேமிப்பாக சிறு தொகையை வைத்திருப்பது எதிர்பாராத தேவைகளை நிவர்த்தி செய்வதற்கு உதவியாக இருக்கும். இவ்வாறு நீங்கள் சேமிக்கும் பணத்தை முதலீடு செய்வதற்கு அரசு பல்வேறு சேமிப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன்படி போஸ்ட் ஆபீஸில் வழங்கப்படும் பொது வருங்கால வைப்பு நிதி திட்டம் என்பது ஒரு நீண்ட கால சேமிப்பு திட்டமாகும்.
அந்த வகையில் தபால் அலுவலகம் மாதாந்திர வருமான திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டமானது இந்திய அஞ்சல் மூலம் வழங்கப்படும் அரசாங்க ஆதரவு பெற்ற முதலீட்டு திட்டம். இந்த திட்டத்தின் கீழ் அதிகபட்சமாக 9 லட்சம் ரூபாய் செலுத்தி கணக்கை தொடங்கும் பட்சத்தில் அன்றைய தினத்தில் இருந்து ஐந்து வருடத்திற்கு மாதம் 5,550 வட்டியாக கிடைக்கும். திட்டத்தின் முடிவில் டெபாசிட் செய்த ஒன்பது லட்சத்தை முழுமையாக பெற்றுக்கொள்ளலாம். மனைவியோடு சேர்ந்து கூட்டாக 15 லட்சம் முதலீடு செய்தல் ஐந்து வருடத்திற்கு மாதம் 9250 கிடைக்கும்.