
மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் நபார்டு வங்கியில் வேலை வாய்ப்பு தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது உதவி மேலாளர் பணிகளுக்கான 102 காலி பணியிடங்கள் நிரப்பப்பட இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கு மாதம் ரூ. 47,500 முதல் ரூ. 89,150 வரை ஊதியம் வழங்கப்படும். இதில் உதவி மேலாளர் பொது பணியிடங்களில் 50 காலி பணியிடங்களும், உதவி மேலாளர் சிஏ பிரிவில் 4 பணியிடங்களும், உதவி மேலாளர் நிதி பிரிவில் 7 பணியிடங்களும் என மொத்தமாக 17 பணியிடங்கள் நிரப்பப்பட இருக்கிறது. இதில் பொது மேலாளர் உதவி பணிகளுக்கு டிகிரி முடித்தவர்களும், உதவி மேலாளர் சிஏ பணிகளுக்கு ஏதேனும் ஒரு டிகிரியுடன் ஏசிஏஐ-ல் மெம்பர்ஷிப் பெற்றிருக்க வேண்டும்.
அதன் பிறகு நிதி உதவி மேலாளர் பணிகளுக்கு பிபிஏ, பிஎம்எஸ் முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். இந்த பணிகளுக்கு 21 வயது முதல் 30 வயது வரை இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்தப் பணிகளுக்கு முதன்மை தேர்வு, மெயின் தேர்வு, சைக்கோ மெட்ரிக் டெஸ்ட் போன்ற தேர்வுகள் மூலம் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இந்தப் பணிகளுக்கு கணினி வழி வாயிலாக நாடு முழுவதும் தேர்வுகள் நடைபெற இருக்கிறது. மேலும் இந்த பணிகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் ஆகஸ்ட் 18 ஆகும்.