
LIC தன் பயனர்களுக்கு பல்வேறு பயன் உள்ள திட்டங்களை பல வருடங்களாக தொடர்ந்து வழங்கி வருகிறது. இதில் அனைத்து வயதினருக்கும் ஒரு பாலிசி இருக்கிறது. அதில் ஒன்று LIC ஜீவன் லாப் பாலிசி ஆகும். இந்த ஜீவன் லாப் பாலிசி பாதுகாப்பு, சேமிப்பு உள்ளிட்ட 2 நன்மைகளையும் வழங்குகிறது.
இத்திட்டத்தில் முதலீடு செய்த பிறகு முதிர்வு நேரத்தில் மொத்த தொகையை பெறுவீர்கள். மேலும் இந்த பாலிசி திட்டத்தில் நீங்கள் மாதந்தோறும் 7 ஆயிரத்து 572 ரூபாய் மட்டும் சேமித்தால் போதும். அதன்பின் உங்கள் எதிர்காலத்தில் 54 லட்சம் ரூபாயை நீங்கள் பெறுவீர்கள். இவை வரையறுக்கப்பட்ட பிரீமியம் செலுத்தும் மற்றும் இணைக்கப்படாத திட்டம் ஆகும்.