18 வயதில் அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தில் சேரும் ஒருவர் 60 வயது வரை மாதம் தோறும் 210 ரூபாய் டெபாசிட் செய்ய வேண்டும். இதற்கு நாள் ஒன்றுக்கு ஏழு ரூபாய் சேமித்தால் போதும். உங்கள் 60 வயதுக்கு பிறகு நீங்கள் ஓய்வு பெறும்போது மாதம் ஐந்தாயிரம் ரூபாய் ஓய்வூதியம் பெறுவீர்கள். அடல் பென்ஷன் யோஜனா என்பது வாழ்நாள் ஓய்வூதிய திட்டம் ஆகும். ஓய்வூதியம் பெறுபவர் இறந்தால் அவரது மனைவிக்கு ஓய்வூதியம் கிடைக்கும். இருவரும் உயிரிழந்தால் பரிந்துரைக்கப்பட்ட நபர் பணத்தை பெறுவார்.  முழுமையான விவரங்கள் அறிய https://www.india.gov.in/spotlight/atal-pension-yojana என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.