தெலுங்கானா மாநில வேளாண் பல்கலைக்கழகத்திற்கு சொந்தமான நிலத்தை ஹைகோர்ட் வளாக கட்டுமானத்திற்கு கொடுக்க அரசு சமீபத்தில் முடிவெடுத்தது. இந்த முடிவை எதிர்த்து மாணவர்களும் ஆர் எஸ் எஸ் அமைப்புடன் தொடர்புடைய அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் அமைப்பை சேர்ந்த மாணவர்களும் போராட்டத்தில் இறங்கினர்.

இந்நிலையில் அமைப்பை சேர்ந்த மாணவி ஒருவரை தெலுங்கானா பெண் போலீசார் ஸ்கூட்டியில் துரத்தி சென்றனர். அப்போது மாணவியின் தலைமுடியை பிடித்து இரண்டு பெண் போலீசாரம் சிறிது தூரம் வரை இழுத்துச் சென்றுள்ளனர்.

இதற்கு கண்டனங்கள் எழுந்த நிலையில் அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்ட மனைவியை தலைமுடியைப் பிடித்து தர தரவென இழுத்துச் சென்றது ஏற்றுக்கொள்ள முடியாதது. இதற்கு போலீசார் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாரதிய ராஷ்டிரிய சமிதி கட்சியின் தலைவர்களில் ஒருவரான கவிதா என்பவர் வலியுறுத்தியுள்ளார்.