சென்னை பல்கலைக்கழகத்தில் ஏழை மாணவர்கள் பயன்பெறும் வகையில் இளங்கலை படிப்பில் இலவச கல்வி திட்டம் உள்ளது. இதில் 2024-2024 ஆம் கல்வியாண்டிற்கான ஆன்லைன் மாணவர்கள் சேர்க்கை தொடங்கியுள்ளது. அதன்படி சென்னை பல்கலைக்கழகத்துடன் இணைப்பு பெற்ற தனியார் மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் 12 ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியான பிறகு மாணவர்கள் இலவச கல்வி திட்டத்தில் சேர்ந்து பயன்பெற விண்ணப்பிக்கலாம்.

இதற்கு www.unom.ac.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும். இந்த திட்டத்தில் விண்ணப்பிக்கும் மாணவர்களின் குடும்ப வருமானம் ஆண்டுக்கு 3 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். மேலும் பொருளாதாரத்தில் பின் தங்கிய மற்றும் ஆதரவற்ற மாணவர்கள், முதல் பட்டதாரிகள் மற்றும் திருநங்கைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.