
234 சட்டமன்றத் தொகுதிகளிலும், 10, +2 பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு நடிகர் விஜய் இன்று பரிசளிக்கிறார். 12 ஆம் வகுப்பு பொது தேர்வில் 94.56 சதவீதம் மாணவ மாணவிகள் வெற்றி பெற்றார்கள். இதில் 96.44 சதவீதம் மாணவர்கள் 92 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், விழா நடைபெறும் அரங்கிற்குள் செல்ஃபோன், பேனா, புத்தகம் போன்றவற்றை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஏனெனில் கடந்த முறை நடந்த விருது வழங்கும் விழாவில், செல்ஃபி எடுப்பது, ஆட்டோகிராஃப் வாங்குவது போன்ற செயல்கள் அரங்கேறியதால் தடை விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.