
ssc, ரயில்வே தேர்வு, வங்கித் தேர்வு போன்ற மத்திய அரசு போட்டித் தேர்வை எளிதாக எதிர்கொள்ளும் வகையில் ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் இலவச பயிற்சிகள் வழங்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து தற்போது ஒன்றிய அரசின் போட்டி தேர்வுகளில் மாணவர்கள் பங்கேற்பதற்காக சென்னை, கோவை, திருச்சி, மதுரை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் பயிற்சி மையங்கள் அமைக்கப்படவுள்ளதாக விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி அறிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், போட்டித் தேர்வுகளில் தமிழக இளைஞர்கள் வெற்றி பெற வேண்டும் என்கிற நோக்கத்தோடு தான் நான் முதல்வன் திட்டம் மேம்படுத்தப்பட்டு வருகிறது . எனவே மாணவர்கள் இதில் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.