பள்ளிகளில் 5, 8ம் வகுப்புகளுக்கு ‘ஆல் பாஸ்’ முறை ரத்து செய்யப்படுவதாக ஒன்றிய அரசு அறிவித்தது. இந்த நிலையில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியதாவது, மத்திய அரசு கல்வி உரிமைச் சட்டத்தில் கொண்டுவந்துள்ள திருத்தங்களால் தமிழ்நாட்டில் எந்த மாற்றமும் இருக்காது என கூறியுள்ளார். மேலும் தமிழ்நாட்டில் அனைத்து பள்ளி குழந்தைகளும் தொடர்ந்து தடையின்றி கல்வி பயின்றடை இயல்பாக எட்டாம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி வழங்கப்படும் முறை தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது.

கல்வி உரிமை சட்டத்தின் விதிகளை திருத்தம் செய்து 5 மற்றும் 8-ஆம் வகுப்பு தேர்வுகளில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு இரண்டு மாதங்களில் மறு தேர்வு முறையையும் தேர்ச்சி பெறாத குழந்தைகள் அதே வகுப்பில் ஓராண்டு பயில வேண்டும் என்ற முறையையும் மத்திய அரசு கொண்டு வந்திருக்கிறது. கல்வி உரிமை சட்டத்தில் ஒன்றிய அரசு கொண்டு வந்திருக்கும் திருத்தங்களால் தமிழ்நாட்டு பள்ளிகளில் தேர்ச்சி முறையில் எந்த மாற்றமும் இருக்காது. தற்போதைய தேர்ச்சி முறையே தொடரும் என கூறியுள்ளார்.